மேலும் செய்திகள்
கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்
31-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை சார்பில் டிரைவர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.ஏ.எப்.டி. மைதானத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமை சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி துவக்கி வைத்தார். ஜோதி கண் மருத்துவமனை டாக்டர் வனஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் பஸ் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.இதில், 150க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் செய்திருந்தனர். தெற்கு எஸ்.பி., மோகன்குமார், கணேஷ், சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
31-Aug-2024