உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்சோவில் தந்தை கைது

போக்சோவில் தந்தை கைது

புதுச்சேரி: போக்சோ வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு 14 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய பெண் தனது 14 வயது மகள் சோர்வுடன் இருப்பதைக் கண்டு விசாரித்தார். அப்போது, அச்சிறுமி, தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தனது தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து, ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார் விசாரணையில் தந்தையே தனது மகளை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை