உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

புதுச்சேரி: கடைக்கு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார். விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த மொரட்டாண்டி பகுதியை சேர்ந்தவர் லும்பாரம் மகன் பிரவீன்குமார், 20; இவர் பிளஸ் முடித்து விட்டு, தனியார் கல்லுாரியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காமராஜ் சாலையில் இவரது தந்தை வைத்துள்ள கம்யூட்டர் கடையை திறக்க கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து சென்றார். அவர் கடையில் இருந்த கண்ணாடி கதவை திறந்து வைத்து விட்டு சாவியை அருகில் வைத்து விட்டு சென்றுள்ளார். தந்தையின் போனுக்கு என்னை தேட வேண்டாம். நான் எங்கே செல்கிறேன் என மெசைஜ் அனுப்பி விட்டு தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை லும்பாரம் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !