உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீயணைப்புத்துறை பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

தீயணைப்புத்துறை பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தீயணைப்பு பணிக்கு தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இரு தினங்கள் நடக்கிறது.புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 57 தீயணைப்பாளர், 12 டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, புதுச்சேரி லாஸ்பேட்டை வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள கோட்ட தீயணைப்பு அதிகாரி அலுவலகத்தில், வரும் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. அதில், தேர்வானவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதி, உரிய நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை