கலை அறிவியல் படிப்புகளுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வு
புதுச்சேரி : கலை அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப பாடங்களை வரும் 18 ம் தேதிக்குள் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.இது குறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளநிலை மருத்துவம் மற்றும் இன்ஜீனியரிங் அல்லாத பாடப்பிரிவுகளுக்கான 4-ம் கட்ட கலந்தாய்விற்கு மாணவர்கள் தங்களது விருப்ப பாடங்களை வரும் 18ம் தேதி காலை 11:0௦ மணிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 3வது கட்ட கலந்தாய்வு வரை மாணவர்கள் தேர்வு செய்த விருப்ப பாடங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. இதுவரை இடம் கிடைக்கப் பெறாதவர்கள் மட்டும் 4-ம் கட்ட கலந்தாய்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் தொழில்படிப்புகளுக்கு பங்கேற்கலாம். விருப்ப பாடங்கள் தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.