மேலும் செய்திகள்
பைக்காரா ஏரியில் சவாரி சுற்றுலா பயணியர் 'குஷி'
16-Feb-2025
புதுச்சேரி : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நோணாங்குப்பம் அரசு படகு குழாமில் மகளிர் இலவசமாக படகு சவாரி செய்தனர்.புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகள் சார்பில், மகளிர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே சுற்றுலா துறை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டது.புதுச்சேரி சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் நோணாங்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிவது வழக்கம்.இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், நோணாங்குப்பம் படகு குழாமில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று காலை திடீரென இலவச படகு சவாரி வழங்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.படகு குழாமிற்கு வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுண்ணாம்பாறில் இருந்து பாரடைஸ் கடற்கரைக்கு இலவசமாக படகு சவாரி செய்து மகிழ்ந் தனர். படகு குழாமிற்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இல வச படகு சவாரி மேற் கொண்ட மகளிர்களுக்கு பூ மற்றும் இனிப்புகள் வழங்கி, மகளிர் தின வாழ்த் துக்களை தெரிவித் தார். அப்போது, பெண்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
16-Feb-2025