உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை தொட்டி மீது பைக் மோதல்: அரசு ஊழியர் பலி

குப்பை தொட்டி மீது பைக் மோதல்: அரசு ஊழியர் பலி

புதுச்சேரி: குப்பை தொட்டி மீது பைக் மோதிய விபத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் உயிரிழந்தார்.புதுச்சேரி, தேங்காய்திட்டு சன் கார்டன் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் வேலாயுதம், 55; பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்., ஊழியர். இவர் கடந்த 6ம் தேதி தனது பைக்கில், உப்பளம் அம்பேத்கர் சாலை வழியாக சென்றார். இந்திரா காந்தி மைதானம் அருகே சாலையில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் பைக் மோதி விழுந்தார். படுகாயம் அடைந்த வேலாயுதத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட வேலாயுதம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகரை சேர்ந்தவர் சங்கரன். இவர் மனைவி கலா, 61; கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு, தம்பதி இருவரும் தள்ளுவண்டியை தனது வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு தள்ளிச் சென்றனர். மெயின்ரோட்டில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக், கலா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா சிகிச்சை பலனின்றி இறந்தார். வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி