உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழைய துறைமுகத்தில் கவர்னர் திடீர் ஆய்வு

பழைய துறைமுகத்தில் கவர்னர் திடீர் ஆய்வு

புதுச்சேரி: பழைய துறைமுகத்தில் சமீபத்தில் இடிந்து விழுந்த பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மாலை பார்வை யிட்டு, அதனை புனரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, படகு மூலம் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்துக்கு சென்று, அங்கு படகுகள் நிறுத்துமிடம் மற்றும் முகத்துவாரத்தை பார்வையிட்டார்.மேலும், துறைமுகம் ஆழப்படுத்தும் பணி மற்றும் படகு போக்குவரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுக பாலத்தை புதுப்பிக்கலாம் என கவர்னரிடம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர் நெடுஞ்செழியன், துறைமுகத்துறை இயக்குநர் முகமது மன்சூர், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் மற்றும் மீனவ அமைப்பினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை