உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா கடத்தல் 2 பேர் கைது

குட்கா கடத்தல் 2 பேர் கைது

கிள்ளை,: கிள்ளை அருகே மினி லாரியில், 28 கிலோ புகையிலை பொருட்களை கடத்திச்சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று கிள்ளை அடுத்த ராதாவிளாகம் வீரன்கோவில் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில், 28 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சமாகும். இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, தில்லைவிடங்கன் தெற்கு தெரு பீமராவ், 56; கீழ் அனுவம்பட்டு வி.வி.எஸ்., நகர் சம்சூதீன், 42; ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி