உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹைமாஸ் விளக்குகள் இயக்கி வைப்பு 

ஹைமாஸ் விளக்குகள் இயக்கி வைப்பு 

புதுச்சேரி, ஜூலை 13– லாஸ்பேட்டை தொகுதியில் பழுதடைந்த ஹைமாஸ் விளக்குகள் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவக்கொழுந்து இயக்கி வைத்தார்.  லாஸ்பேட்டை, மடுவுப்பேட் புத்துக்கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் கல்பனா சாவ்லா நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஹைமாஸ் விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், அமைச்சர் சிவக்கொழுந்து பழுதடைந்த ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி, சீரமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவக்கொழுந்து இயக்கி வைத்தார். தொடர்ந்து,  ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதி மற்றும் வ.உ.சி. வீதியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் இயக்கி வைக்கப்பட்டது.  இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !