விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2024ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களுக்கான அரசாணை கடந்த ஆண்டு நவ., மாதம் வெளியிடப்பட்டது. அதில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியொட்டி, இன்று 7 ம் தேதி விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.அரசு சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள உத்தரவில், விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று 7ம் தேதி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.