மேலும் செய்திகள்
முதியவர் தற்கொலை
04-Feb-2025
புதுச்சேரி : பெட்ரோல் பங்க் ஊழியர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் ஜெயம் நகரை சேர்ந்தவர் ரவி, 52; பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கு, வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 18ம் தேதி, பைக் மோதிய விபத்தில் காயமடைந்த ரவி, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி, மீண்டும் வரவில்லை. இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Feb-2025