உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேவகி செராமிக்ஸ் ஷோரூம் புதுச்சேரியில் திறப்பு விழா

தேவகி செராமிக்ஸ் ஷோரூம் புதுச்சேரியில் திறப்பு விழா

புதுச்சேரி, : புதுச்சேரி, தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையில் தேவகி செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு, ஷோரூம் நிறுவனர்கள் திருநாவுக்கரசு, தேவகி, வேல்முருகன், ஹேமலதா தலைமை தாங்கினர். உரிமையாளர்கள் கோபு, மோகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, ஷோரூமை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ஜான்குமார், ரமேஷ், ராமலிங்கம், முன்னாள் எம்.பி., ராமதாஸ், ஆடிட்டர் வைத்தியநாதன், புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் குணசேகரன் மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.தேவகி செராமிக்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'எங்களிடம் சோமானி, கோஹ்லர், ரோக்கா, பாரிவேர் ஆகிய முன்னணி நிறுவனங்களின் அனைத்து வகையான ப்ளோர் டைல்கள், வால் டைல்கள், சானிட்டரிவேர், பாத் பிட்டிங்ஸ், பாத் டப் உள்ளிட்டவை குறைந்த விலையில் கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ