உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அபிேஷகப்பாக்கம் பள்ளியில் பல்நோக்கு மேடை திறப்பு

அபிேஷகப்பாக்கம் பள்ளியில் பல்நோக்கு மேடை திறப்பு

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில் 5 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மேடை திறப்பு விழா நடந்தது.தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்துவதற்கு 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி வளாகத்தில் பல்நோக்கு மேடை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவை, சபாநாயகர் செல்வம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவில், பள்ளி துணை ஆய்வாளர் லிங்கசாமி, தலைமை ஆசிரியர் பழனி, உதவி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பா.ஜ., பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல்மாறன், தஷ்ணாமூர்த்தி, உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ