உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்பிரிட் மூலம் வருமானம்: முன்னாள் எம்.எல்.ஏ., கண்டனம்

ஸ்பிரிட் மூலம் வருமானம்: முன்னாள் எம்.எல்.ஏ., கண்டனம்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி ஸ்பிரிட் புதுச்சேரியை உருவாக்கி வரலாற்று கரையை ஏற்படுத்தி உள்ளார் என, மாஜி எம்.எல்.ஏ., சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதித்தே தீருவோம் என்று பேசி இருப்பது முதல்வரின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக அரசுக்கு உறுதுணையாக இருப்பது, வெளிப்படையாக தெரிகிறது. பிரதமர் ஸ்பிரிச்சுவல் புதுச்சேரி உருவாக்குவோம் என்றார். இவர்கள் ஸ்பிரிட் புதுச்சேரியை உருவாக்குவோம் என்கின்றனர். இது, ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களை கேவலப்படுத்தும் செயல்.போதை மாநிலமாக புதுச்சேரியை மாற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ரத்து என கூறி மீண்டும் குப்பை வரி வசூல் செய்வது, மின்சாரத்துக்கு கூடுதல் வரி, பாதாள சாக்கடை வரி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, ஐ.டி., பார்க் உருவாக்குவதை பற்றி பேசவில்லை. மது தொழிற்சாலைகளை ஆணித்தரமாக திறப்பது பற்றி பேசி இருப்பது உள்நோக்கம் கொண்டது. வருமானம் வர பல்வேறு வழி இருந்தும், மதுபான தொழிற்சாலைகளை உருவாக்குவதில் அரசு குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ