உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகரிக்கும் அனாதை பிணம்; போலீசார் தினமும் பூஜை

அதிகரிக்கும் அனாதை பிணம்; போலீசார் தினமும் பூஜை

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினசரி பணிக்கு வரும் கான்ஸ்டபிள்கள், முதல் வேலையாக போலீஸ் நிலையத்தில் மஞ்சள் தெளித்து, சாமி படங்களுக்கு ஊதுவத்தி ஏற்றி இன்று மட்டும் அடையாளம் தெரியாத சடலங்கள் வரக்கூடாது என வேண்டி கொள்கின்றனர்.காரணம் ஒரு அடையாளம் தெரியாத சடலம் வந்தால் அன்றைய தினம் அந்த கான்ஸ்டபிளுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவு ஏற்படுவது மட்டும் இன்றி, அடையாளம் தெரியாத பிணங்களை அடக்கம் செய்வது பெரும் சவாலாக மாறி விடுகிறது. உறவினர்களால் கைவிடப்பட்ட பலர் வெளியூர்களில் இருந்து புதுச்சேரி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக குடித்து சாலையோரம் சுருண்டு விழுந்து இறந்து விடுகின்றனர். இந்த உடல்களை கொண்டு செல்ல போலீஸ் துறையில் தனி அமரர் ஊர்தி வாகனம் இல்லை.போலீஸ் ஆம்புலன்ஸ் 2 மட்டுமே உள்ளது. இறந்தவர் உடலை கொண்டு செல்ல போலீஸ் ஆம்புலன்ஸ் அழைத்தால் வருவது கிடையாது. காயமடைந்தவர்களை மீட்க மட்டுமே வருவோம்; இறந்த உடல்களை எடுக்க முடியாது என தெரிவித்துவிடுகின்றனர்.இதனால் இறந்த உடல்களை அடக்கம் செய்ய, தனியார் ஆம்புலன்ஸ்சுக்கு ரூ. 1,500, அரசு மருத்துவமனையில் இருந்து கதிர்காமம் மருத்துவமனை உடல் கொண்டு செல்ல ரூ. 200, கதிர்காமத்தில் பிரேத பரிசோதனை செய்ய ரூ. 500, அங்கிருந்து திப்ராயப்பேட்டை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல ரூ. 200, அடக்கம் செய்ய ரூ. 600, மாலை உள்ளிட்ட சடங்கிற்கு ரூ. 500 என ஆகிவிடுகிறது. அடையாளம் தெரியாத உடல் மதுபான பார் அல்லது பெரிய வணிக வளாகம் அருகில் கிடந்தால், அங்கிருந்து ஏதேனும் உதவி கிடைக்கும். பாலம், பஸ் நிலையம், சாலையோர பிளாட்பாரம் பகுதியில் கிடந்தால் ஒட்டுமொத்த செலவும் போலீஸ்காரர் தலையில் விழுந்து விடும்.மாதத்திற்கு ஒரு அடையாளம் தெரியாத உடல் இருந்தால் பரவாயில்லை, வாரந்தோறும் 3 அல்லது 4 உடல்கள் ஒதுங்குவதால் என்ன செய்வது என புலம்பும் போலீசார், இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல போலீஸ் அமரர் ஊர்தி வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை