உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடற்ற மக்களுக்கு இலவச மனைப் பட்டா இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

வீடற்ற மக்களுக்கு இலவச மனைப் பட்டா இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: வில்லியனுார், மங்கலம், ஊசுடு தொகுதியில் வீடற்ற மக்களை கணக்கெடுத்து இலவசமனைப்பட்டா வழங்க வேண்டும் என இந்திய. கம்யூ., வலியுறுத்தியுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், வில்லியனுார், மங்கலம், ஊசுடு தொகுதி குழு கூட்டம் வில்லியனூர் அலுவலகத்தில் நடந்தது. தொகுதி துணை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். உறுப்பினர் இயக்கம் குறித்து தொகுதி செயலாளர் பெஞ்சமின் பேசினார். இன்றைய அரசியல் நிலை மாநில குழு முடிவுகள் குறித்து கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, எதிர்கால இயக்க நடவடிக்கைகள் குறித்து அன்துவான் பேசினர். கூட்டத்தில் தொகுதி குழு உறுப்பினர்கள் கணேசன், நாசர், பாத்திமா கிளைச் செயலாளர் சூசை ராஜ், சரவணன், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர்.வில்லியனுார், மங்கலம், ஊசுடு தொகுதிகளில் கணக்கெடுத்து இலவசமாக வீட்டு மனைகளை வழங்கிட வேண்டும். வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை