உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆயி அம்மாள் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

ஆயி அம்மாள் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

புதுச்சேரி: முத்திரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியை அனிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் சரோஜா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை சுமதி ராகவன், ஆசிரியர் செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சின்னராசு விழாவினை தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் ஏஞ்சலின் ஜெயம், சாவித்திரி, ஜான் டார்க், சதிஷ், சுஜோமலர், ரோசலின், சிவமதி, சூர்யா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை பிருந்தாவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !