மேலும் செய்திகள்
சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு
09-Sep-2024
புதுச்சேரி: வில்லியனுார் ஐ.டி.ஐ.,க்கு புதிய கட்டடம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி அரசு கிராமப்புற மாணவர்களின் தொழிற் கல்வி வளர்ச்சிக்காக வில்லியனுாரில் ஐ.டி.ஐ., ஏற்படுத்தப்பட்டு கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். ஆரம்பத்தில் அரசு கட்டடத்தில் இயங்கி வந்த தொழிற்பயிற்சி மையத்தின் கட்டடம் மிகவும் பழுதடைந்ததால் ,தற்பொழுது தனியார் கட்டடத்தில் வாடகைக்கு போதிய வசதிகள் இல்லாமல் இயங்கி வருகிறது.மேலும் அங்கு நடத்தப்பட்ட சில பாடப்பிரிவுகள் இடவசதி இல்லாத காரணத்தால் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஐ.டி.ஐ., கட்டடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அமைச்சர் சட்டசபையில் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்தார்.அதன்படி இதற்கான நிதியை தொழிலாளர் நலத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் பணி துவங்க துறை செயலர், ஆணையருக்கு பரிந்துரை செய்தீர்கள். ஆனால் கடிதம் கொடுத்து 7 மாதமாகியும் இதுவரை ஐ.டி.ஐ., கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதல்வர் தலையிட்டு வில்லியனுாரில் ஐ.டி.ஐ.,க்கு என சொந்த கட்டடம் கட்ட துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
09-Sep-2024