உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி: லோட்டஸ் அணி, மோகித் அணி சாம்பியன்

ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி: லோட்டஸ் அணி, மோகித் அணி சாம்பியன்

புதுச்சேரி : ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி ஆண்கள் பிரிவில் பிள்ளையார்குப்பம் லோட்டஸ் அணியும், பெண்கள் பிரிவில் வில்லியனுார் மோகித் அணி சாம்பியன் பட்டம் வென்றது.புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 11-வது மாநில அளவிலான ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி தொண்டமாநத்தத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்று விளையாடியது. இதன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பிள்ளையார்குப்பம் லோட்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது இடத்தை வில்லியனூர் விக்டரி அணியும், 3-வது இடத்தை லாஸ்பேட்டை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அணியும் பிடித்தது. பெண்கள் பிரிவில் வில்லியனூர் மோஹித் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது இடத்தை கரிக்கலாம்பாக்கம் ஜெ.ஜெ.அணியும், 3-வது இடத்தை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அணியும் பிடித்தது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ரத்தினபாண்டியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு செயலாளர் சக்திவேலு முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இளைஞர் விளையாட்டு நலம் இணை இயக்குனர் வைத்தியநாதன், இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், கிட்லா சத்ய நாராயணா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை