காமராஜர் பிறந்த நாள்
அரியாங்குப்பம்: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மணவெளி தொகுதி த.வெ.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு, மணவெளி தொகுதி த.வெ.க., சார்பில் ராமு எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.