கூத்தாண்டவர் ரத உற்சவம்
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கூத்தாண்டவர் கோவிலில் கூத்தாண்டவர் ரத உற்சவம் நேற்று காலை 7:30 மணிக்கு நடந்தது. உற்சவத்தினை துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின் ரத உற்சவம் மாட வீதியாக சென்று கோவில் தேர் அடிக்கு வந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனபூபதி மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.