கும்பாபிேஷக விழா
புதுச்சேரி: சொர்ணாவூர் வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.இதையொட்டி கடந்த 21ம் தேதி காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, காலை 9:30 மணிக்கு பட்டு வஸ்தர ஹோமம், 9:45 மணிக்கு கடம் புறப்பாடு, 10:.00 மணிக்கு விமானம் மகா கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.