உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரியமாணிக்கம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கரியமாணிக்கம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் வலம்புரி யோக விநாயகர் கோவில் கும்பாபி ஷேகம் இன்று நடக்கிறது.கரியமாணிக்கம் வெங்கடசுப்பா ரெட்டியார் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி யோக விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்கையம்மன் கோவில்கள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5.00 மணிக்கு உற்சவமூர்த்தி சிறப்பு திருமஞ்சனம், 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது.இன்று காலை (10ம் தேதி) காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 10:30 மணிக்கு வலம்புரி யோக விநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை