உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் லோக் அதாலத் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரியில் லோக் அதாலத் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு 5 கோடியே 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. அதே போல, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாத்திலும், ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடந்தது.தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சஞ்சீவ் கண்ணா உத்தரவுபடி, புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின்படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 15 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில், 1 அமர்வையும், தலைமை நீதிபதி சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா ஆகியோர் மேற்பார்வையிட்டனர். காரைக்காலில், 4 அமர்வுகளும், ஏனாமில் 1 அமர்வும், மொத்தம் 21 அமர்வுகள் செயல்பட்டது.அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள், 6305 எடுத்து கொள்ளப்பட்டு, 857 வழக்குகள் முடிக்கப்பட்டு, 5 கோடியே 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் 624 நிலுவை வழக்குகள் முடிக்கப்பட்டது.இந்த தகவலை, புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) அம்பிகா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை