உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நுரையீரல் பரிசோதனை முகாம்

வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நுரையீரல் பரிசோதனை முகாம்

புதுச்சேரி : வெஸ்ட்மெட் மருத்துவமனையில், இலவச நுரையீரல் மருத்துவ பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது.புதுச்சேரி இ.சி.ஆர்., சாலையில் உள்ள லாஸ்பேட்டை வெஸ்ட்மெட் மருத்துவமனையில், நாளை (2ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இலவச நுரையீரல் மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு, சிறப்பு மருத்துவர் கோகுலவசந்த் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். முகாமில், புகை பழக்கம் உள்ள நபர்கள், தொடர்ச்சியாக இருமல், நாள்பட்ட சளி, மூச்சுத் திணறல், மார்பில் இருந்து மூச்சு இரைப்பது போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.மேலும், ரத்த கபம், நெஞ்சு வலி, அலர்ஜி, தும்மல், மூக்கடைப்பு, குறட்டை பிரச்னை, நாள் முழுவதும் அரைத்துாக்க நிலை, துாக்கத்தில் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். நுரையீரல் செயல்பாடு சோதனையான பி.எப்.டி, மார்பு எக்ஸ்ரே ஆகிய, ரூ.1,500 மதிப்புள்ள சோதனையை, ரூ.200 மட்டும் செலுத்தி, எடுத்து கொள்ள சலுகையும் வழங்கப்படுகிறது. முன்பதிவுக்கு 95973 59111, 0413-2255566 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ