உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மா.கம்யூ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜா தியேட்டர் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் முருகன் துவக்க உரையாற்றினார். மாநில செயலாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், வீடில்லா மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும். நகரப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். பிரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து நேரு வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், சீனுவாசன், கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் மதிவாணன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !