மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா
புதுச்சேரி: உலக சதுப்பு நிலக்காடு தினத்தை முன்னிட்டு, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. புதுச்சேரி கடலோரக் காவல் படை சார்பில், கார்கில் நினைவு தினம் மற்றும் உலக சதுப்புநிலக் காடுகள் தினத்தை முன்னிட்டு, சதுப்புநிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நாட்டின் நலனுக்காக இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக்கன்று நடும் பணி நடந்தது. சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி, 500 மாங்குரோஸ் மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார். இதில், கடலோரக்காவல் படை எஸ்.பி., தனசேகரன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போலீசார், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.