உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அமைச்சர் நேரில் ஆய்வு

கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கரும்பு வகைகளின் வளர்ச்சி, நீர் மற்றும் மண் வளம் சார்ந்த கரும்பு வகைகள், கரும்பு பயிரை தாக்கும் சிவப்பு அழுகல் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தும் அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.கரும்பு நடவு, களையெடுத்தல், அறுவடை மற்றும் வெல்லம் உற்பத்தி இயந்திரங்களை பார்வையிட்டார்.கரும்பு பயிர் பாதிக்கும் மேல் துளைப்பான் நோய் எதிர்ப்பு, உப்பு நீர் செறிந்த மண் வகைகளில் வளரக்கூடிய வீரிய இனப்பெருக்க விதைகள், வெல்லம் தயாரித்தல், பதப்படுத்துதல், கையாளுதல் மற்றும் சேமித்தல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் விஞ்ஞானிகள், சேர்மன், இயக்குனர், உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை