உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரத்ததான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

ரத்ததான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

புதுச்சேரி: புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில், இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.  முகாமை, சேவை இயக்கத் தலைவர் நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நேயம் மக்கள் கழக நிர்வாகி விநாயகம், முத்து ரத்தினம் அரங்க மேல்நிலை பள்ளி  தாளாளர் சுந்தர்ராஜன், இளைஞரணி தலைவர் ரகு, தொழிலதிபர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !