உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு 

கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு 

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போனை, லைப்கார்ட் வீரர்கள் போலீசாருடன் இணைந்து, உரியவரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி கடற்கரை பகுதியில் லைப்கார்ட் ரமேஷ் மற்றும் சாந்தகுமார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9:00 மணிக்கு கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்று கீழே கிடந்தது. அதைகண்ட ரமேஷ் மற்றும் சாந்தகுமார், மொபைல் போனை எடுத்து, அங்கு ரோந்து பணியில் இருந்த பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதையடுத்து, போலீசார் மொபைல் போன் யாருடையது என, விசாரணை நடத்தினர். அதில், ஆந்திராவை சேர்ந்த ஸ்வேதா என்பவருடையது என்பதும், அவர் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது, மொபைல் போனை தவறவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மொபைலை தவறவிட்ட ஸ்வேதாவை காந்தி திடலுக்கு வரவழைத்து, லைப்கார்ட் ரமேஷ், சாந்தகுமார் ஆகியோர் மூலம் போனை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை