மேலும் செய்திகள்
காதலன் வீட்டில் இளம்பெண் மர்ம மரணம்
01-Aug-2024
திருக்கனுார்: சுத்துக்கேணியில் மகன் தொடர்ந்து குடித்துவிட்டு வந்ததால், மனமுடைந்த தாய் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் அன்னக்கிளி, 64. இவர் தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மணிகண்டன் தொடர்ந்து குடித்துவிட்டு, மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அன்னக்கிளி நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகேயுள்ள பூவரச மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Aug-2024