மேலும் செய்திகள்
மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
10-Aug-2024
புதுச்சேரி: அரசு பள்ளி இடஒதுக்கீட்ட்டில் மருத்துவம சீட் கிடைத்த மாணவர்களுக்கு அதற்கான ஆணையினை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 10 சதவீதம் விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்த 32 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 10 மாணவர்களின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 22 மாணவர்களின் விண்ணப்பங்களில் 8 விண்ணப்பங்கள் நீட் நிர்ணயித்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 14 மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான ஆணையினை சட்டசபையில் வழங்கினார்.புதுச்சேரி 10, காரைக்கால்-2; மாகி-2 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசுச் செயலர் ஜவஹர், பள்ளிக்கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி, உயர்கல்வி இயக்குநர் அமன் ஷர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
10-Aug-2024