உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நங்கிலிகொண்டான் டோல்கேட் மாதாந்திர கட்டணம் உயர்வு

நங்கிலிகொண்டான் டோல்கேட் மாதாந்திர கட்டணம் உயர்வு

செஞ்சி: நங்கிலிகொண்டான்.டோல்கேட்டில் கனரக வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. செஞ்சி – திண்டிவனம் இடையே உள்ள நங்கிலிகொண்டான் டோல்கேட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்கள் தவிர்த்து வர்த்தக பயன்பாட்டிற்கான இலகு, கனரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் 5 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இலகுரக வணிக வாகனங்களுக்கு 3,430 ரூபாயில் இருந்து 3,435 ரூபாயாகவும், 2 அச்சு பஸ், லாரிகளுக்கு 7,190 ரூபாயிலிருந்து 7,195 ரூபாயாகவும், 3 அச்சு வணிக வாகனங்களுக்கு 7,845 ரூபாயிலிருந்து 7,850 ரூபாயாகவும், 4 முதல் 6 அச்சு வரை உள்ள கரைக வாகனங்கள் (டிப்பர் லாரிகள்) 11,280 ரூபாயிலிருந்து 11,285 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாள் திரும்ப கட்டணம் 505 ரூபாயிலிருந்து 510 ரூபாயாகவும் 7 அச்சு கனராக வாகனத்திற்கு மட்டும் 10 ரூபாய் உயர்த்தி மாதாந்திர கட்டணம் 13,730 ரூபாயிலிருந்து 13,740 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்களுக்கு கட்டண மாற்றம் இல்லை என டோல்கேட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ