உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாட்டு தீவனம் வழங்கியதில் ஊழல் அமைச்சர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

மாட்டு தீவனம் வழங்கியதில் ஊழல் அமைச்சர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

வில்லியனுார்: வில்லியனுாரில் மங்கலம் தொகுதி காங்., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.தொகுதி பொறுப்பாளர் ரகுபதி தலைமை தாங்கினார். தொகுதி தலைவர்கள் விநாயகம், வீரமுத்து, செல்வராசு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:புதுச்சேரியில் காங்., தலைமையில் இந்தியா கூட்டணி உள்ளது. நமது உரிமையை பெற தவறிவிட்டோம். வரும் தேர்தலில், கண்டிப்பாக நம் உரிமையை பெறுவோம். யாரோ, எதையோ பேசுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டாம்.புதுச்சேரியில் காங்., பலமான கட்சியாக உருவெடுக்கும். பாசிக், பாப்ஸ்கோ, ஏ.எப்.டி., சுதேசி ஸ்பின்னிங் உள்ளிட்ட மில்களுக்கு, முதல்வர் ரங்கசாமி மூடுவிழா நடத்தியுள்ளார். தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் மில்களை திறப்போம் என, வாக்குறுதி கொடுத்தார். கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.மங்கலம் தொகுதி அமைச்சர், மாட்டு தீவனம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார். அங்கன்வாடிக்கு சத்துணவு விநியோக டெண்டரை வடலுாரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் தி.மு.க., நின்று தொடர் தோல்வி அடைந்துள்ளது. காங்., நின்றால் கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, செந்தில், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை