மேலும் செய்திகள்
ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
23-May-2026
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், 6 வது தமிழக பட்டாலியன் பிரிவு சார்பில், 10 நாட்கள் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் சக்கரபர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நாராயன் முன்னிலை வகித்தார். வரும், 26 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் முகாமில் துப்பாக்கி சுடுதல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், புவி வரைபடம் கண்டறிதல், துாரத்தை மதிப்பிடுதல், தடை பயிற்சி ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் தேசிய மாணவர் படையினர், அடுத்து நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கு பெற தேர்வு செய்யப்படுவர். முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மற்றும் கல்லுாரி தேசிய படை மாணவ, மாணவிகள் 400 பேர் மற்றும் ராணுவ வீரர்கள், கல்லுாரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர்கள் பங்கேற்றனர்.
23-May-2026