புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா நகரில் புதிய டிரான்ஸ்பார்மரை ரவிக்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். மங்கலம் தொகுதி, அரியூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் மின் அழுத்தம் குறைவினால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி, அப்பகுதி மக்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் பேரில், ரூ.21:80 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 315 கிலோவாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டது. இதனை ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் உமேஷ்சந்திரா, இளநிலைப் பொறியாளர் முகமது இஸ்மாயில், முன்னாள் சேர்மன் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கண்ணபிரான், பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.