உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கன்னியாஸ்திரியின் ஆடியோ வைரலால் பரபரப்பு

கன்னியாஸ்திரியின் ஆடியோ வைரலால் பரபரப்பு

புதுச்சேரி : அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக கன்னியாஸ்திரி ஒருவர் கதறும் ஆடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.ஆடியோவில், புதுச்சேரியில் உள்ள திருச்சபையில் ஒன்றில் தங்கி சேவையாற்றி வரும் தான், நிர்வாகத்தில் நடக்கும் சில முறைகேடுகளையும், தவறுகளையும் தட்டிக் கேட்டதால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறேன்.என்னை எப்படியாவது சபையில் இருந்து வெளியேற்றிவிட்டால், தவறுகள் மறைந்து விடும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.சபையில் எனக்கு உணவு வழங்கக்கூடாது என கூறியுள்ளதால், வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து சாப்பிட்டு வருகிறேன்.எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இவர்கள், தங்களுடைய தவறை மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வர்கள் என்ற பயமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.அதனால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு யார் காரணம் என சில பொறுப்பாளர்களை குறிப்பிட்டு, வாக்குமூலம் அளிக்கிறேன் என கூறியுள்ளார்.இந்த ஆடியோ கிருஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை