உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தண்ணீர் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதி்

தண்ணீர் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதி்

புதுச்சேரி : தண்ணீர் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியினை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி பொதுப்பணித்துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் புதுச்சேரியில் தண்ணீர் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் பாரத் பில் பேமென்ட் வசதியினை துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா சட்டசபையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி ஆன்லைன் வசதியினை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசுச் செயலர் ஜெயந்த குமார், தலைமைப் பொறியாளர் தீனதயாளன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் எபிநேசர் சோபியா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த வசதியின் மூலம் நுகர்வோர்கள் பில் கவுண்டர்களில் வரிசையில் நின்று தண்ணீர் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுப்பணித்துறையின் இணையதளம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதள வங்கிச் சேவையினை, டிஜிட்டர் பரிவர்த்தனைகள் மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும். மேலும் நுகர்வோரின் பில் விபரங்களை விரைவாகப் பெறுதல், பரிவர்த்தனை வரலாறு, பரிவர்த்தனையின் நிலை, புதுப்பிப்புகள் தொடர்பான வாடிக்கையாளர் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி