உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாடகங்களை பார்க்க மக்கள் ஆர்வம்

நாடகங்களை பார்க்க மக்கள் ஆர்வம்

அரியாங்குப்பம் : கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த பல்வேறு நாடகங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில், சங்கரதாஸ் சாமிகள் நாடக விழா, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, வரும் 27ம் தேதி வரை, தினசரி பல்வேறு தலைப்புகளின் நாடங்கள் நடக்க உள்ளது.இங்கு நேற்று மாலை, கொஞ்ச நேரம், திணைகள், சிரிக்கலாம் வாங்க, நான் ரெடி, நீங்க ரெடியா, கலைஞர் ஆகிய தலைப்புகளில் நாடங்கள் நடந்தது. கலைஞர்கள் நடத்திய நாடகங்களை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். தொடர்ந்து, இன்று மாலை, கிராமத்து வாசம், புதிய வாழ்வு, ஒண்ணுமே புரியலே உலகத்திலே, பக்கம் பார்த்து பேசு, ஆகிய தலைப்புகளில் நாடகங்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை