காமராஜர் நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்க கோரி மனு
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனரிடம் மனு அளித்தார்.புதுச்சேரியில் பல்வேறு தொகுதிகளில், குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம், ரேஷன் கடைகளில் விலை இல்லா அரசி வழங்கப்பட்டு வருகிறது. காமராஜ் நகர் தொகுதியில் ரேஷன் கடைகளில் அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என, தொகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து வைத்திலிங்கம் எம்.பி., ஆலோசனையின் பேரில், காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனரை சந்தித்து காமராஜ் நகர் தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலிலும் விரைவில் அரிசி வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தார். மனுவினை பெற்றுக் கொண்ட இயக்குனர், விரைவில் தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.