உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

​புதுச்சேரி: புதுச்சேரி, உடல் உழைப்போர் சங்கம் சார்பில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகே நடந்தது. சங்கத்தின் ஆட்டோ, டிரைவர், உரிமையாளர்கள் பிரிவு அமைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். மா.கம்யூ., மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். ஏ.ஐ.சி.சி.டி.யூ., மாநிலச் செயலாளர் புருஷோத்தமன், மா.கம்யூ., கிளை பொறுப்பாளர் சகாயராஜ், சங்க மாநிலச் செயலாளர் விஜயா, புதுச்சேரி சமையல்வாயு விநியோக தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் விக்டர், மாவட்ட செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, மானியம் வழங்க வேண்டும். இயற்கை எரிவாயு சமையல் இணைப்புகளை அதிகப்படுத்த வேண்டும். ​மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதுச்சேரி முழுதும் மலிவு விலை ‘மக்கள் உணவகங்கள்’ ஏற்படுத்த வேண்டும். ​ஆட்டோ தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை