உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல் 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல் 

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை தொகுதி மாற்று திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர ஸ்கூட்டியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு, இலவச மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கும் விழா எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.விழாவில், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர ஸ்கூட்டியை வழங்கினார். மேலும், அனைத்து வாகனங்களுக்கும் தனது சொந்த செலவில் பெட்ரோல் நிரப்பி கொடுத்தார்.இதில், சமூக நலத்துறையை சார்ந்த அதிகாரிகள், எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ