உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 நாள் பயணமாக நேபாளம் செல்லும் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள்

7 நாள் பயணமாக நேபாளம் செல்லும் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள்

புதுச்சேரி : புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் 7 நாள் பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டு செல்கின்றனர்.நேபாள அரசு சட்டசபையை காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபை சார்பில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நேபாளம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று 1ம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கு தங்குகின்றனர். மறுநாள் 2ம் தேதி டில்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம், காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர். மார்ச் 3ம் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அங்கு கந்தகி சட்டசபையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.4ம் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான் தர்பார், சுயம்புநாதர் கோவிலை பார்வையிடுகின்றனர். 5ம் தேதி பசுபதிநாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6ம் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர். 7ம் தேதி காத்மாண்டில் இருந்து டில்லி வழியாக சென்னை திரும்புகின்றனர்.இந்த பயணத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் போடப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளம் செல்லும் சில எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் மனைவியை அழைத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை