உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி டிராவல் மார்ட் சுற்றுலா கண்காட்சி

புதுச்சேரி டிராவல் மார்ட் சுற்றுலா கண்காட்சி

புதுச்சேரி : புதுச்சேரி, கடற்கரை சாலை காந்தி திடலில், தி டூரிசம் செல்டர் நிறுவனம் சார்பில் 5ம் ஆண்டு 'புதுச்சேரி டிராவல் மார்ட்-2025' சுற்றுலா கண்காட்சி கடந்த 1ம் தேதி துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது.கண்காட்சியை காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சிக்கு, தி டூரிசம் செல்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி சவுகடா சஹா தலைமை தாங்கினார்.கண்காட்சியில் புதுச்சேரி, மேகாலயா, திரிபுரா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாத் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் குறித்து பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். மேலும், அந்த மாநிலங்களில் உள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இக்கண்காட்சி இன்று (3ம் தேதி) வரை நடக்கிறது. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை