மேலும் செய்திகள்
போலீசாருக்கு முதலுதவி பயிற்சி
25-Aug-2024
புதுச்சேரி: ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சார்பில், புதுச்சேரி கடல்சார் பயிற்சி கல்லுாரியில் முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மாலிக் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் ராமன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் நோக்கவுரையாற்றினார். முகாமில், ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பயிற்றுனர் குணசேகரன் மாணவர்களுக்கு தீக்காயம், இதய நுரையீரல் புத்துயிர், விபத்து மீட்பு உள்ளிட்ட முதலுதவி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார். இந்தியன் ரெட் கிராஸ் புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் கண் தானம் விழிப்புணர்வு, கண்தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார். உறுப்பினர் தசரதன் கருத்துரை வழங்கினார்.
25-Aug-2024