உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்; போலீசார் ஏற்பாடு

வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்; போலீசார் ஏற்பாடு

புதுச்சேரி: வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, கிழக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் ரிப்லெக்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்பதிற்காக தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக வேளாங்கண்ணி நோக்கி செல்கின்றனர். இ.சி.ஆர்., வழியாக வரும் பக்தர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை, காந்தி வீதி வழியாக ஜென்மராகினி மாதா ஆலயம், இருதய ஆண்டவர் பசிலிகாவில் ஓய்வு எடுத்து விட்டு, கடலுார் வழியாக பயணத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாத பகுதியில் நடந்து செல்லும்போது வாகன விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, அவர்களின் பேக்குகளில் இரவில் ஒளிரும் ரிப்லெக்டர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கிழக்கு போக்குவரத்து போலீசார் செய்தனர். மரப்பாலம் சிக்னலில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் பேக்குகளில் ரிப்லெக்டர்கள் ஸ்டிக்கர்களை ஒட்டி, சாலையோரம் பாதுகாப்பாக நடந்து செல்லுங்கள் என அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganesun Iyer
ஆக 26, 2024 05:02

பாதயாத்திரை, காவடி இதெல்லாம் இந்து வழிபாட்டில் மூட நம்பிக்கைன்னு சொல்லி மதமாறினபிறகு அதையே செய்யறாங்க இதுக்கு பருத்திமூட்ட அதே குடோன்னல இருந்திருக்கலாமே... சில பேருக்கு மட்டும் சம்பாதிக்கிற வழி.. பாவம் மககள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை