ஓய்வூ பெற்ற ஊழியர்ளுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை
புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதி பலன்கள் மற்றும் நிலுவை தொகை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் இசைவாணன் கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு; புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, வழங்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்கள் மற்றும் நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே, 7 மாத நிலுவை தொகை மற்றும் பணப் பலன்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.