உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உருளையன்பேட்டை தொகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க கோரிக்கை 

உருளையன்பேட்டை தொகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க கோரிக்கை 

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி, தேர்தலில் வெற்றி பெற்ற நேரு, தலைமை பொறியாளரிடம் கோரிக்கை வைத்தார்.  உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை, கல்வே பங்களா, பள்ளிக் கூட வீதி, பகத்சிங் வீதி, கருணாநிதி வீதி, குளக்கரை வீதி, இளங்கோ நகர், புதுப்பாளையம், உருளையன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படுவதில்லை. விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மாசு கலந்து துர்நாற்றம் வீசுவதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நேருவிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.  அதையடுத்து, நேரு தலைமையில் அப்பகுதி மக்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை அலுவலகத்தில் சந்தித்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும், பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகளை எடுத்து சென்று, அதனை டி.டி.எஸ்., கருவி மூலம் பரிசோதித்து, உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார். குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்காவிட்டால் பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, நேயம் மக்கள் கழக பொதுச் செயலாளர் விநாயகம், ரகு, குணசேகரன், வேலாயுதம்,  வேல்முருகன், சாமிநாதன் உட்பட பலர் உடனிருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை