மேலும் செய்திகள்
மக்கள் சந்திப்பு கூட்டம்
24-Feb-2025
அரியாங்குப்பம்: தவளக்குப்பம், ஆனந்தா நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சாலையுடன், வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுப்பணித்துறை மூலம் 2.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், இளநிலை பொறியாளர் நடராஜன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ் உடனிருந்தனர்.
24-Feb-2025